லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகரில் இலவச தனியார் வேலைவாய்ப்பு முகாம் 

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் பிரபல  தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 27-ம் தேதி நடைபெற இருக்கிறது.

Updated On :25 ஏப்ரல் 2013, 12:02 pm

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் பிரபல  தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 27-ம் தேதி நடைபெற இருக்கிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளியில் குறிப்பிட்ட நாளில் நடைபெறும் இந்த முகாமில் 10-க்கும் மேற்பட்ட பிரபல நிறுவனங்கள் பங்கேற்று பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

இதில், இந்த மாவட்டத்தைச் சேர்ந்த 8-வது, 10,12 மற்றும் பட்டம், பட்டயம், தொழிற் பயிற்சி ஆகியவைகளில் தேர்ச்சி பெற்ற அனைவரும் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இதில், பங்கேற்பவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எந்த வகையிலும் பாதிக்காது.

இந்த முகாம் காலை 10 மணிக்கு தொடங்கி, தொடர்ந்து மாலை 5 மணி வரையில் நடைபெற இருக்கிறது. அதனால், சுற்றுக்கிராம பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோர் பங்கேற்று பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.